Canadamirror Canada Mirror,

Latest Tamil News

அமெரிக்கா தெரிவு செய்துள்ள மருந்துகள் ஆபத்தை ஏற்படுத்தும்... கனடா எச்சரிக்கை!

அமெரிக்கா தெரிவு செய்துள்ள ஹைட்ராக்சி குளோரோகுயின் மற்றும் குளோரோகுயின் வகை மருந்துகள் ஆபத்தை ஏற்படுத்தும் என்று கனடா எச்சரிக்கை விடுத்துள்ளது.

கனடா வெளியிட்டுள்ள தகவலில், குளோரோகுயின் மற்றும் ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்துகள் தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் மருந்துகளாகும் என்று பொது சுகாதாரத்துறை சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

கனடாவிலும், சில பேர் ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்துகள், மற்றும் குளோரோகுயின் மருந்துகளை மருந்தகங்களில் வாங்கி பயன்படுத்துவதை அறிந்து கொண்டதால் இதுபோன்ற அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக தெரிகிறது.

ஐரோப்பிய மருந்துகள் ஏஜென்சியும் இதுபோன்ற ஒரு அறிவிப்பை முன்னதாக வெளியிட்டிருந்தது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பலமுறை ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்துகளை கொரோனாவுக்கு வழங்க அறிவுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

www.Canadamirror.Com Designed by Templateism.com Copyright © 2014-2021

தீம் படங்களை வழங்கியவர்: Bim. Blogger இயக்குவது.