Canadamirror Canada Mirror,

Latest Tamil News

ஏர் கனடா விமான நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு

கனடாவில் இருந்து விமானம் மூலம் அமெரிக்காவுக்கு பயணிகள் புதிய பரிசோதனை முறைகளை எதிர்கொள்ளவுள்ளதால் இரண்டு மணி நேரங்களுக்கு முன்னர் பயணிகள் விமான நிலையத்தில் இருக்க வேண்டும் என எயர் கனடா மற்றும் வெஸ்ட் ஜெட் ஆகிய விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளன.
அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் குறித்த பரிசோதனை முறைகள் சில நாட்களுக்கு முன்பு நடைமுறைக்கு வந்தது.

குறிப்பாக மடிக் கணணிகள், Tablets எனப்படும் வரைபட்டிகைக் கணினிகள் உள்ளிட்ட தனிப்பட்ட இலத்திரனியல் சாதனங்கள் தொடர்பில் அதிகரித்த பாதுகாப்பு விதிமுறைக்ள பின்பற்றப்படும் எனவும் கூறப்படுகிறது.

இதேவேளை அமெரிக்காவுக்கு விமானம் மூலம் செல்லும் பயணிகள், அவர்கள் மீதும் அவர்களின் பொருட்கள் மீதும் அதிகரிக்கப்பட்ட சோதனைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று உள்நாட்டு பாதுகாப்பு திணைக்களமும் தனது இணையப் பக்கத்தில் அறிவித்தல் விடுத்துள்ளது.
வர்த்தக விமானங்களை பங்கரவாதக் குழுக்கள் இலக்கு வைப்பதனை அடிப்படையாக கொண்டே இந்த புதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அது மேலும் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

www.Canadamirror.Com Designed by Templateism.com Copyright © 2014-2021

தீம் படங்களை வழங்கியவர்: Bim. Blogger இயக்குவது.