கனடாவின் Scarborough பகுதியில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட 38 வயது பெண்ணை டொராண்டோ பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
மார்ச் 13 ஆம் திகதி ஷெப்பர்ட் அவென்யூ கிழக்கின் தெற்கே உள்ள பிரிம்லி மற்றும் பிட்ஃபீல்ட் சாலைகளின் பகுதியில் பிரச்னை ஏற்பட்டிருப்பதாக, காலை 10 மணிக்கு முன்னதாக அவசர குழுவினர் வரவழைக்கப்பட்டனர்.
சம்பவம் அறிந்து விரைந்து வந்த பொலிஸார், துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இரண்டு பெண்கள் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
உடனடியாக இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஒரு பெண் மட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், மற்றொரு பெண் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து கூறியுள்ள பொலிஸார், டொராண்டோ பகுதியில் வசித்து வரும் இலங்கை தமிழ் பெண்ணான தீபா சீவரத்னம் (38) என்பவரின் மார்பில் தோட்டா பாய்ந்ததால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
அதேசமயம் சிகிச்சை பெற்று வரும் மற்றொரு பெண் பற்றிய தகவல் எதுவும் வெளியிடவில்லை.
சந்தேக நபர் 5.8 முதல் 6 அடி வரை கருப்பு நிறத்தில் நடுத்தர உடல்வாகுடன் இருப்பார் என பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
மேலும், தகவல் உள்ள எவரும் பொலிஸ் அல்லது க்ரைம் தடுப்பு அதிகாரிகளை தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
Pages
இந்த வலைப்பதிவில் தேடு
வீடுகள் பற்றாக்குறையை காரணம் காட்டி சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைத்தது கனடா..
கனடாவில் கடுமையான வீடுகள் பற்றாக்குறை நிலவுவதால், அதற்கு வெளிநாட்டவர்கள், குறிப்பாக சர்வதேச மாணவர்கள் அதிக அளவில் கனடாவுக்கு வருவதும் ஒரு கா...
About
Gallery
Contact Us
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Live
First Visual News Website in Tamil |
Follow us on facebook
Techonlogy
Popular Posts
-
பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, இலங்கையில் சீனி, உருளைக்கிழங்கு, வெங்காயம் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்து வி...
-
அமெரிக்கா தெரிவு செய்துள்ள ஹைட்ராக்சி குளோரோகுயின் மற்றும் குளோரோகுயின் வகை மருந்துகள் ஆபத்தை ஏற்படுத்தும் என்று கனடா எச்சரிக்கை விடுத்துள்ள...
-
ஒண்டாரியோவில், தடுப்பூசி சான்றிதழ் கோரப்படுகின்ற வர்த்தக நடவடிக்கைகளில், இன்றுமுதல், கொள்ளளவு கட்டுப்பாடு அகற்றப்படுகிறது. உணவகங்கள், உடற்பய...
Blog Archive
- ஜனவரி 2024 (1)
- செப்டம்பர் 2023 (2)
- பிப்ரவரி 2022 (2)
- செப்டம்பர் 2021 (2)
- ஏப்ரல் 2020 (5)
- மார்ச் 2020 (3)
- ஜூலை 2017 (4)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.