Canadamirror Canada Mirror,

Latest Tamil News

கனடாவை குறிவைக்கும் கொரோனா- 30ஆயிரத்தைக் கடந்தது!

கொரோனா வைரஸின் அதிதீவிரத் தாக்கம் உலகம் முழுவதும் மனித இழப்பையும் பொருளாதார வீழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வைரஸ் தொற்று கனடாவிலும் தற்போது வேகமாகப் பரவ ஆரம்பித்துள்ளதுடன் நேற்று அதிகபட்ச உயிரிழப்பு பதிவாகியுள்ளது.
கனடாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் ஆயிரத்து 727 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்று மட்டும் 185 பேர் மரணித்துள்ளனர்.
மேலும், கனடாவில் மொத்தமாக 30 ஆயிரத்து 106 பேருக்கு இதுவரை தொற்று இனங்காணப்பட்டுள்ளதுடன் மொத்த மரணங்கள் ஆயிரத்தைக் கடந்து ஆயிரத்து 195 ஆகப் பதிவாகியுள்ளன.
இதனைவிட, 9 ஆயிரத்து 729 பேர் குணமடைந்துள்ள நிலையில் 557 பேர் தீவிர சிக்கிச்சைப் பிரிவிலும் 19 ஆயிரத்து 182 பேர் ஓரளவு வைரஸால் பாதிக்கப்பட்டும் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இதேவேளை, கனடாவில் இதுவரை, 4 இலட்சத்து 87 ஆயிரத்து 625 பேருக்கு வைரஸ் தொற்று குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கனடா மாநிங்களில் கியூபெக் மாநிலமே அதிக பாதிப்பை எதிர்கொண்டுள்ள நிலையில் அங்கு இதுவரை 15 ஆயிரத்து 857 பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், ஒன்ராறியோ மாநிலம் பாதிப்பில் அடுத்த இடத்தில் உள்ளதுடன் அங்கு இதுவரை 8 ஆயிரத்து 961 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, அல்பேர்டாவில் 2 ஆயிரத்து 158 பேரும் பிரிட்டிஸ் கொலம்பியாவில் ஆயிரத்து 561 பேரும் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை பதிவாகியுள்ளது.

Quebec
14,248
1,341
360
Ontario
7,953
2,574
274
Alberta
2,397
1,124
50
British Columbia
1,575
983
77
Nova Scotia
517
93
2
Saskatchewan
301
136
4
Newfoundland and Labrador
247
159
3

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

www.Canadamirror.Com Designed by Templateism.com Copyright © 2014-2021

தீம் படங்களை வழங்கியவர்: Bim. Blogger இயக்குவது.